இலங்கையின் தற்போதைய நிலை பற்றி இந்திய வெளியுறவுச் செயலாளர் அந்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளித்துள்ளார்

இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடிகள் பற்றி இந்தியா பாரிய அளவில் கவலையடைந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். இந்தியப் பாராளுமன்றத்தின் சர்வதேச கட்சிப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதுபற்றிக் கருத்து வெளியிட்டார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைப் போன்று இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.
