இலங்கையின் தென்பகுதியில் உள்ள சர்வதேச கடற்பகுதியில் பாரியளவிலான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஆறு பேரும், காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது கைப்பற்றப்பட்ட படகும் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தப் படகில், 175 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் பெறுமதி சுமார் மூவாயிரத்து 500 மில்லியன் ரூபாவாகும். பொலிஸாரும், புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.