Home » இலங்கையின் பொருளாதாரம் சரிவை நோக்கி நகர்கிறது ; உலகவங்கி எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் சரிவை நோக்கி நகர்கிறது ; உலகவங்கி எச்சரிக்கை!

Source

தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 2022 இல் 9.2% சதவீதத்திலும் 2023 இல் மேலும் 4.2% சதவீதத்திலும் வீழ்ச்சியடையும் என உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கொவிட் தொற்றுநோய் மற்றும் ரஷ்ய-உக்ரைன் யுத்தம் காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரிப்பு இலங்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை காட்டுகிறது.பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் போது, ​​2021 மற்றும் 2022 க்கு இடையில் வறுமை 25.6% ஆக இரட்டிப்பாகியுள்ளது. வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை 27 இலட்சம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடாத் சர்வோஸ், சமூகப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், ஏழைகள் மற்றும் மிகவும் தேவைப்படும் மக்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் வறுமை தொடர்பில் பேராதனை அறிஞர்கள் குழுவினால் இந்த வாரம் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கையின்படி, நாட்டில் வறுமையில் வாடும் குடும்பங்களின் எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2019ல் இந்த எண்ணிக்கை 7 லட்சம் குடும்பங்களாக இருந்தது.

2019 ஆம் ஆண்டில், வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை சுமார் 30 லட்சமாக இருந்தது, 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 96 லட்சமாக அதிகரித்துள்ளது, அதன்படி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 42% பேர் வறுமையில் உள்ளனர்.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image