இலங்கையின் பொருளாதாரம் வழமைக்கு திரும்பிக்கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு

சில மாதங்களாக நிலவிய நெருக்கடிகளின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வழமைக்கு திரும்பிக்கொண்டிருப்பதாக ஆய்வுகளில் உறுதிப்படுதத்ப்பட்டுள்ளது. வர்த்தக சஞ்சிகையான எல்.எம்.டீ சஞ்சிகையின் செப்டெம்பர் மாத இதழில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நடவடிக்கைகள் எதிர்வரும் மாதங்களில் சிறந்த வளர்ச்சியை எய்தும் என்றும் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களினால் இந்நிலை ஏற்பட்டிருப்பதாக வர்த்தக துறையினர் குறிப்பிட்டிருக்கின்றனர்.
