இலங்கையில் தற்போது ஆக்கிரமித்துள்ள தொலைக் காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கையின் மத்தியில் தற்போது சீனத் தொலைக் காட்சியும் தனது சேவையை இலவசமாக ஆரம்பிக்கின்றது.
இலங்கையின் தொலைக்காட்சிகளில் சீன அலைவரிசை ஒன்று இலவசமாக பரீட்சார்த்த ஒளிபரப்பு சேவையை தற்போது ஆரம்பித்துள்ளது.
சீன ஒளிபரப்பு சேவையான சைனிஸ் குளோபல் ரெலிவிசன் நெற்வேற் அலைவரிசையை தற்போது கேபிள் இணைப்பு இன்றி ஒளிபரப்பாகின்றது.
இலங்கை அரச தொலைக்காட்சிகளான ரூபவாகினி, ஐ ரீவி மற்றும் நேத்ரா ஆகிய ஒரே குழும ரீவிகள் நாட்டில் யூ.எச்.எவ் இல் வெளிவருகின்றன.
இவ்வாறு வெளிவரும் ஒளிபரப்பு சேவையானது கடந்த பெப்ரவரியில் இருந்து அலைவரிசை பங்காளிகளை கோரியிருந்தனர். இதன்போது இந்த சீன ஒளிபரப்பு சேவை அதனை பற்றியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன அலைவரிசைகளிற்கு 5 இடத்தில் அலைவரிசை கோபுரங்கள் உண்டு அவை, கொழும்பு, மடேல்சிம் ( ஊவா) கொக்காவில்.முல்லைத்தீவு.
யாழ்ப்பாணம் அன்டனா. hantana இந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே தற்போது இடம்பெறும் பரீட்சார்த்த ஒளிபரப்பு தெளிவாக இயங்குகின்றது.
இவ்வாறு இயங்கும் சைனிஸ் குளோபல் ரெலிவிசன் நெற்வேர்க் முன்னர் ஓர் தொலைபேசி நிறுவன இணைப்பு மூலம் கட்டண சேவையில் இயங்கியபோதும் இவை தற்போது இலவச சேவையாக ஒளிபரப்பப்படவுள்ளது.
இலங்கைக்கு வெளியே புற நாடு ஒன்றில் இருந்து ஒளிபரப்பாகும் சமயம் செய்மதி அலைவரிசெயூடாக இலங்கைக்கு கடத்தப்பட்டு இங்கே ஒளிபரப்பப்படுவதாக தெரியவருகின்றது.
இதேநேரம் நாடுமுழுவதும் கேபிள் இணைப்பு சேவை மூலம் ஏனைய அலைவரிசைகளின் இணைப்பு வழங்கப்படும் அதேநேரம் இலங்கையின் சில அலைவரிசைகள் மட்டும் இலவசமாக பார்வையிட முடியும். இதேநேரம் சீனத் தொலைக்காட்சி அலவரிசை இலவசமாக ஒளிபரப்பாகும் சந்தர்ப்பத்தில் தமிழ்ச் சேவையும் ஆரம்பிக்கப.பட்டால் இதன் அடுத்த கட்டம் என்ன என்பதே கேள்வியாகவுள்ளது.