Home » இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தப்பிச் சென்ற 8 பேர் 3 தினங்களாக நடுக்கடலில தத்தளிக்கின்றனர்.

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தப்பிச் சென்ற 8 பேர் 3 தினங்களாக நடுக்கடலில தத்தளிக்கின்றனர்.

Source

இலங்கையில் நிலவும் அரசியல் பொருளாதர நெருக்கடிகள் காரணமாகவும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இன்னும் மீட்டெடுக்க முடியாமல் சிரமப்பட்டும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில், இந்தியா நோக்கிச் செல்வது அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகிறது.
உயிர் அச்சுறுத்தலுக்கு நடுவில் உடமைகளை விற்று, நாட்டைவிட்டு வெளியேறினால் மறுகரைக்குப் போய் உறுதியாக சேர்வார்கள் என்கிற உத்தரவாதம் இல்லை. எனினும் நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் படகுகள் மூலம் வெளியேறு தெடரவே செய்கிறது.
அவ்வகையில் இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி படகில் ஏற்றிச் செல்லப்பட்ட 8 பேரையும இலங்கை படகு ஓர் திடலில் இறக்கி விட்டுத் திரும்ப்பிய நிலையிலேயே 8 பேரும் 3 தினங்களாக உணவோ அல்லது குடிநீரோ இன்றித் தவிப்பதாகவும் இதில் நான்குபேர் சிறுவர்கள் என திடலில் தவிப்பவர்கள் கனடா உதயனிடம் தெரிவிக்கின்றனர்.
நடுக்கடலில் இறக்கிவிடப்பட்ட தாங்கள் எங்கிருக்கிறோம் என்பது தெரியாத நிலையில், உயிரைப் பணயம் வைத்து உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர்களில் ஒருவர் கூறினார்.
இதேநேரம் குறித்த விடயம் இரு நாட்டு கடற்படையினரின கவனத்திறகும் கொண்டு செல்லப்பட்டுள்ளதனால் 8பேரும் எந்த நாட்டின எல்லையில் நிற்கின்றனர் என்ற தேடுதல் இடம்பெறுகின்றது.
அவர்கள் இருக்கும் தீடையில் நெருப்பை பற்ற வைத்து அதன் மூலம் உதவி கோரிய நிலையில், தமக்கு ஒரு பக்கத்தில் தொலைவில் இருக்கும் ஊரின் விளக்கொளிகள் தெரிகின்றன, உயர்ந்த கோபுரம் ஒன்றும் பகல் வேளைகளில் வாகன நடமாட்டமும் தெரிகிறது என்று அவர் கூறினார். ஆகவே அவர்கள் இராமேஸ்வரத்திற்கு அருகில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தகவலறிந்த இலங்கை கடற்படையினர், அவர்கள் பற்ற வைத்த நெருப்பை வைத்து, சர்வதேச கடல் எல்லையை கடந்து அவர்கள் இருக்கும் இடம் இந்தியாவின் கடல் எல்லை பகுதியில் உள்ளது என்று கூறுகின்றனர்.
அந்த 8 பேரும் நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தய கடற்படைக்கும், கடலோரக் காவல் படையினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

TL

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image