Home » இலங்கையில் இருந்து இன்றும் 7 பேர் தமிழகம் சென்றனர்.

இலங்கையில் இருந்து இன்றும் 7 பேர் தமிழகம் சென்றனர்.

Source

ந.லோகதயாளன்.

யாழ்ப்பாணம், ஜூலை 19

இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள முடியாத காரணத்தால் இன்றும் 7 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளளனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க முடியாமல் கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து தமிழர்கள் தமிழகத்தை நோக்கி தப்பிச் செல்லும் சூழலில் இன்றும் 7 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற ஏழுபேரும் திருகோணமலை மற்றும. யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 2  ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தனுஸ்கோடியை சென்றடைந்த 7 பேரும. தற்போது மண்டம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image