இலங்கையில்
இருந்து கடத்திச் சென்ற 5 கீலோ தங்கம் மண்டபத்தில் இந்திய அதிகாரிகளிடம் அகப்பட்டது.
இலங்கையில் மன்னார் ஊடாக தமிழ்நாட்டிற்குள் தங்கம் கடத்தி வரப்படுவதாக இந்திய சுங்க அதிகாரிகளிற்கு கிடைத்த இரகசிய தகவலின் பெயரிலேயே மண்டபம் பகுதியில் தங்பம் மடக்கிப் பிடிக்கப்பட்டதோடு அதனை எடுத்துச் சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டு மேற்கொண்ட விசாரணையில் இதன் உரிமையாளர் என ஒருவரின் பெயரை உரைத்துள்ளார்.
அதனையடுத்து யாருக்காக தங்கம் கடத்தப்பட்டதோ அவரது வீடு அமைந்துள்ள மரைக்கால் பட்டினத்தில் உள்ள வீடு முற்றுகையிட்ட சமயம் வீட்டிடைப் பூட்டிவிட்டு உரிமையாளர் தப்பிச் சென்றுள்ளார். இதனால் மாவட்ட ஆட்சியர் பொலிசார் முன்னிலையில் வீடு உடைக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்றுள்ளது.
TL