இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாக கருதப்படும் 6 கிலோ தங்கம் தமிழ்நாட்டின் வேதாளைப் பகுதியில் இந்திய அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருத்து இந்தியாவிற்கு கடல்வழியாக நேற்று இரவு தமிழகத்தின் வேதாளை கடல்கரையில் சென்று இறங்கிய சமயம்
மத்திய வருவாய் பகுதியின் புலனாய்வு பிரிவினர் தங்கத்தை கைப்பற்றியுள்ளனர்.
இதேநேரம் தங்கத்தை எடுத்துச் சென்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாணயத்தில் 125 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கமே கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் இலங்கையரா அல்லது இந்தியரா என இதுவரை உறுதிபடுத்த முடியவில்லை.
TL