இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதியாகச் செற்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

27/6/22 அன்று இலங்கையிலிருந்து அகதியாக சென்ற பரமேஸ்வரியே மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இரவு உயிரிழந்தார்.
தமிழகம் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயில் மணல் திட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்ட இரண்டு இலங்கை அகதிகளை தமிழகப் பொலீசார் மயக்க நிலையில் இருந்த இரண்டு முதியவர்களையும் மீட்டு அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். இதில் இருவரும் மன்னார் மாவட்டம் முருங்கன் பகுதி கொல்லர்ஸ்ரீகுளத்தை சேர்ந்த பெரியண்ணன், (82), திரிகோணமலையை சேர்ந்த பரமேஸ்வரி (71) என ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.
இருவரும் கடந்த ஞாயிறு இரவு தலைமன்னார் பகுதியில் இருந்து படகில் ஏற்றிச் செல்லப்பட்டு கோதண்டர்ராமர் கோயில் அருகே உள்ள கடற்கரையில் இறக்கி விடப்பட்டனர்.
மயக்க நிலையில் இருந்தவர்கள் நோயாளர் காவு வண்டியில் மீட்க முயற்சித்தபோதும் அது அதிக மணல் பகுதி என்பதனால்முடியாமல் போனது. இதனால் மண்டபத்தில் இருந்து ஹோவர் கிராப்ட் கப்பல் வருவதற்கு இந்திய கடலோர காவல் படைக்கு பொலிசார் தகவல் தெரிவித்தனர். இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் 6 நாள்கள் சிகிச்சை பெற்ற தாயார் சிகிச்சை பலணின்றி நேற்றைய தினம் உயிரிழந்தார்.
TL