இலங்கையில் இருந்து இன்று அதிகாலை படகு வழியாக 10 பேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டவர்களே இவ்வாறு தமிழகத்தின் இராமேஸ்வரத்தை அண்டிய தீடையில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இலங்கை இந்திய இடையே உள்ள தீடைகளில் இந்தியாவின் ஆளுகையில் உள்ள 3வது தீடையில் இவ்வாறு அகதிகளாகச் சென்றவர்கள் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இதேநேரம் மேலும் ஒரு படகில் தமிழகம் நோக்கிப் பயணிக்க முற்பட்ட 6 பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.