Home » இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக கலாநிதி கணேஸ் சுரேஸ் பதவியுயர்வு

இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக கலாநிதி கணேஸ் சுரேஸ் பதவியுயர்வு

Source
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொருளியல் கற்கை அலகின் சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி கணேஸ் சுரேஸ் அவர்களுக்கு பொருளியல் பேராசிரியர் பதவி உயர்விற்கான அங்கிகாரம் இன்று பல்கலைக்கழக பேரவையினால் வழங்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் தலைமையில் இன்று (25.03.2023) இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை மற்றும் மதிப்பீட்டிற்கு அமைய இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டது. கலாநிதி கணேஸ் சுரேஸ் இலங்கையில் உள்ள பொருளியல் பாட பேராசிரியர்களுக்குள் இளவயதுப் பேராசிரியர் என்பதுடன் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் இளவயதுப் பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தனது கலாநிதி கற்கை நெறியை அவுஸ்ரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்து தொழிநுட்ப பல்கலைக்கழகத்திலும், முதுமாணிக் கற்கைநெறியினை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் தனது இளமாணிப் பொருளியல் சிறப்புக் கற்கை நெறியினை கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்திருந்தார். இவர் தனது கலாநிதி கற்கை நெறிக்கான ஆய்வினை சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவர் தனது ஆராய்ச்சிகளை உலகத்தரம் வாய்ந்த ஆய்வுச்சஞ்சிகைகளில் வெளியிட்டிருந்தமை இவரது புலமைமையை வெளிக்காட்டுகின்றது. மேலும் இவர் கனடா, அவுஸ்ரேலியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், பங்களாதேஸ், இந்தியா போன்ற நாடுகளில் ஆய்வுக் கருத்தரங்குகளிலும் பங்கேற்றுள்ளார். கணேஸ் மற்றும் தவமணிதேவி ஆகியோரின் மூத்த புதல்வரான கலாநிதி. கணேஸ் சுரேஸ் பெரியநீலாவணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்திலும், இடைநிலை மற்றும் உயர்தரக்கல்வியினை கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையிலும் தொடர்ந்திருந்தார். கலாநிதி கணேஸ் சுரேஸ் சிறந்த சமூகப்பற்றாளரும் பிரதேச அபிவிருத்தில் அதிகளவு ஆர்வமுடையவருமாவார். AR
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image