இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம்

;
இலங்கையின் அபிவிருத்தியில் தேசிய காலநிலை திட்டத்தினை உள்ளீர்க்கும் வகையிலான பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் ருவன் விஜயவர்தன தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இலங்கையின் அபிவிருத்தியில் தேசிய காலநிலை திட்டத்தினை உள்ளீர்க்கும் வகையிலான திட்ட வரைபு இதன்போது ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
