இலங்கையில் கொவிட் நோயாளர்கள் பதிவாகும் வீதம் உயர் மட்டத்தில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

கொவிட் நோயாளர்கள் பதிவாகும் வீதம் உயர் மட்டத்தில் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து சேவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் நோய் பரவும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. எனவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுவது முக்கியமாகும்.
நாட்டில் ஃபைசர் தடுப்பூசியின் காலாயாகும் தினத்தை நீட்டிக்க உலக சுகாதார நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தடுப்பூசிகளை மேலும் சில மாதங்களுக்கு பயன்படுத்த முடியும். சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனத்தால் பெறப்பட்ட தரவுகளின்படி, இது உலகில் ஒரு புதிய தயாரிப்பு என்பதால், காலாவதியாகும் திகதியை மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால், ஃபைசர் தடுப்பூசியின் நான்காவது டோஸை அனைவரும் செலுத்திக் கொள்ள முடியும் என்று விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
