Home » இலங்கையில்  போர்இன்னும் தொடர்கிறது – பாதுகாப்பு அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் ரணில்

இலங்கையில்  போர்இன்னும் தொடர்கிறது – பாதுகாப்பு அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் ரணில்

Source
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது. ஏனைய போர்கள் தொடர்வதாகவே தோன்றுகிறது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது ஆலோசகர்களுடனான முறைசாரா உரையாடலின்போது குறிப்பிட்டுள்ளார் என கொழும்பின் ஊடகத்தகவல் தெரிவித்துள்ளது. இந்தக் கலந்துரையாடலின் போது பாதுகாப்பு தரப்பிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ள முறுகல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வாரம் கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினரால் ஏற்படுத்தப்பட்டிருந்த கடுமையான பாதுகாப்பு வலயம் பற்றிய முறைசாராக் கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயிரம் உணவுப் பொதிகள் பற்றிய தகவல்கள், கடந்த ஆண்டு ஏற்பட்டதைப் போன்ற ஒரு பெரிய போராட்டத்தின் அச்சத்தைத் தூண்டியதாகப் பாதுகாப்புத் தரப்புக்கள் தெரிவித்திருந்தன. இதனையடுத்தே வன்முறையைச் சமாளிக்க படையினரும் காவல்துறையினரும் தயாராக இருந்தனர். எனினும் எதுவும் இல்லை என்பதால் சுமார் 72 மணி நேரத்துக்குள் பாதுகாப்பு பலப்படுத்தல் படிப்படியாகத் திரும்பப் பெறப்பட்டது. பாதுகாப்புத்துறையில் இருப்பவர்கள் உணவுக் கொள்வனவு அடிப்படையில் மதிப்பீடுகளை மேற்கொள்வது அசாதாரணமானது அல்ல. பிரிவினைவாதப் போரின் போதும் வடக்கிலுள்ள வெதுப்பகங்களை உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்த வரலாறுகள் உள்ளன. அசாதாரண அளவு பாண்கள் தயாரிக்கப்படும் போது அவர்களின் கவனம் தூண்டப்படும். இதனால், தாக்குதல் நடக்கலாம் என்ற சந்தேகம்
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image