இலங்கையில் மதுபான விற்பனை 30 வீதத்தினால் வீழ்ச்சி

இலங்கையில் மதுபான விற்பனை 30 வீதத்தினால் குறைவடைந்திருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்ஹ தெரிவித்துள்ளார். மதுபான தயாரிப்பிற்குப் பயன்படுத்தும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையினால் மதுபானங்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதேவேளை மக்களின் பொருளாதார நிலையும் தாக்கம் செலுத்தியிருப்பதனால் மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்திருப்பதாக கபில குமாரசிங்ஹ சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் சட்டவிரோத மதுபானங்களுக்கு மக்கள் அதிகளவில் ஈடுபாடு காட்டுவது தெரியவந்துள்ளது. சட்டவிரோத மதுபான உற்பத்திகளைக் கண்டுபிடிப்பதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் கூறினார்.
