சுற்றுலாத்துறையில் இருந்து அதிகபட்ச வருவாயைப் பெறுவதற்காக இலங்கையில் பார்கள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“இலங்கை 24 மணி நேரமும் திறந்திருக்கும்” நாடாக மாற்றப்பட வேண்டும்” என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.
இரவு 10.30 மணிக்குள் கடைகள், உணவகங்கள், மதுக்கடைகள் மூடப்பட்டால் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முடியாது. எங்களிடம் இரவு பொருளாதாரம் இல்லையென்றால், சுற்றுலாப் பயணிகளை எங்களால் பணம் செலவழிக்க வைக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
மேலும், சுற்றுலா பயணிகள் விமான நிலையங்களுக்கு வந்தவுடன் வனவிலங்கு பூங்காக்கள் மற்றும் பிற இடங்களை பார்வையிட முன்பதிவு செய்து பணம் செலுத்தும் முறையும் இருக்க வேண்டும் என்றார்.
“இந்த மாற்றங்களை நீண்ட காலம் செல்வதற்கு முன்பே நாங்கள் செய்வோம்” என்று டயானா கமகே வலியுறுத்தினார்.