Home » இலங்கையில் 7 நுளம்பு இனங்கள் குறித்து ஆய்வு ; புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பா?

இலங்கையில் 7 நுளம்பு இனங்கள் குறித்து ஆய்வு ; புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பா?

Source

மருத்துவ ஆராய்ச்சி குழு இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் புதிய வகை நுளம்பு இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் இந்த நுளம்பு இனம் பதிவாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Culex (lephoceraomyia) cintellus Culex cintellus என்ற நுளம்பு தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பதிவாகியுள்ளது. எனினும் இந்த நுளம்பு இனம் நோய் காவியா? இல்லையா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இது தவிர, அதே குழு சமீபத்தில் Culex இனத்தைச் சேர்ந்த இன்ஃபுலாவுக்கு அருகில் Culex niinfula cx.sp என்ற நுளம்பு இனத்தைக் கண்டுபிடித்துள்ளது .

அண்மையில், சுகாதார பூச்சியியல் அதிகாரிகளால் 03 புதிய நுளம்பு இனங்களை இலங்கையில் கண்டறியப்பட்டதுடன் மேலும் 04 நுளம்பு இனங்கள் உறுதிப்படுத்தப்பட்டு மரபணு ஆராய்ச்சிக்கு அனுப்பியுள்ளனர்.

என்றாலும் இந்த நுளம்புகள் தாய்லந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இனத்தை சார்ந்தவையா என எவ்வித தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image