இலங்கைக்கு எதிரான ரி-20 போட்டித் தொடருக்கான நியூசிலாந்து அணியின் தலைவராக டொம் லதம் செயலாற்றவுள்ளார். 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர் சர்வதேசப் போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் தடவையாகும். அடுத்த மாதம் பாகிஸ்தானுடனான ரி-20 போட்டித் தொடரிலும் டொம் லதம் பங்கேற்கவுள்ளார். இலங்கைக்கு எதிரான ரி-20 தொடரில், நியூசிலாந்து அணியின் தலைவர் டிம்-சவுத்தி, கேன் வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ், மிச்செல் கென்டர், டெவோன் கொன்வே, மைக்கேல் பிரஷ்வெல் மற்றும் லொக்கி பெர்கியுசன் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள். எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் போட்டித் தொடருக்காக இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.