Home » இலங்கையைச் சுற்றி 1300 கிலோ.மீ. சைக்கிள் பயணம் செய்த இளைஞர்களுக்கு வரவேற்பும் கௌரவிப்பும். 

இலங்கையைச் சுற்றி 1300 கிலோ.மீ. சைக்கிள் பயணம் செய்த இளைஞர்களுக்கு வரவேற்பும் கௌரவிப்பும். 

Source

ஓசோன் ரைட் எனும் கருப்பொருளில்  இலங்கையின் கரையோர பிரதேசங்களுடாக சைக்கிளில் சுற்றி கடல் மற்றும் கரையோர பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பிலிருந்து 1300 கிலோமீற்றர் பயணம் மேற்கொண்ட மட்டக்களப்பின்  இளைஞர்கள் இருவருக்கும் நேற்றைய தினம் மாலை   பயண நிறைவு வரவேற்பும் கௌரவிப்பும்  கல்லடி கடற்கரையில் நடைபெற்றது. 
“Ocean biome” அமைப்பின்  ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில், பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி பழைய மாணவரான அனாமிகன் குமாரசிங்கம் மற்றும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி பழைய மாணவரான சஞ்ஜீவன் அமலநாதன்  ஆகியோரின் பெற்றோர் நண்பர்கள் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எர்.ஆர்.குமாரசிறி  கலந்து கொணடார்.

கடல் சுற்றுப்புறச் சூழலையும் கடல் வளத்தையும் பாதுகாப்பதற்காக சமூகத்தில் பல்வேறு வேலைத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் நோக்கில் “Ocean biome” அமைப்பு   இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்  பயணம் கடந்த முதலாம் திகதி ஆரம்பமானது.

இரண்டு சைக்கிள் ஓட்டிகளும்  11நாட்கள் கொண்ட நீண்ட சைக்கிள் சவாரியை   மேற்கொண்டார்கள்.   இப்பயணத்தின் நோக்கமானது  கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதும்கடலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் கடல் வளங்களை கையாளும்போது பொறுப்பை உருவாக்குவதுமாகும்.

கடலும் கடல் சார்ந்த இடங்களையும் நேசிக்கின்ற இளைஞர் யுவதிகள் வெளிநாட்டவர் என 300க்கும் மேற்பட்ட அங்கத்தவர்களுடன் மட்டக்களப்பை மையப்படுத்தி  “Ocean biome”  தன்னார்வ நிறுவனம்  இயங்கி வருகிறது.

திறந்த கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கடல்சார் கல்வி அறிவு ஆகியவற்றை இணைப்பதன் மூலம்  கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் மிக அழுத்தமான சவால்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்ற பல்வேறு திட்டங்களை கொண்டு நமது அடுத்த தலைமுறையை கடல்நீர் சார் நேயமிக்க  சமூகமாக மாற்றுவதை  நோக்கமாகக் கொண்டு இயங்கிவருகின்றது.

இவற்றை வெற்றி கொள்வதற்காக கல்வி,தொழில்நுட்பம், ஆராய்ச்சி, மற்றும் வணிகம் எனும் பெரும் 4  துறைகளின்  ஊடாக மிகச் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. கடல் சுற்றுப்புற சூழலையும் கடல் வளத்தையும் பாதுகாப்பதற்காக சமூகத்தில் பல்வேறு சேவைத் திட்டங்களை உருவாக்கி அவற்றை வாரம், மாதம், வருடம் என மிக சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

கடல் வளங்களை பாதுகாப்பதற்காக மிகப் பாரிய வேலைத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது .இந்த அமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் ஒன்றுதான் இந்த  “ Ocean ride” சைக்கிள் சவாரியாகும்.

இலங்கையின்  கரையோர மாவட்டங்களான மட்டக்களப்பு, திருகோணமலை ,முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், புத்தளம் ,நீர்கொழும்பு, கிக்கடுவை, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மீண்டும் மட்டக்களப்பை வந்தடைந்த இப்பயணம் மொத்தம் 1,300 கிலோ மீட்டர்கள் 11 நாட்கள் கொண்டதாகும்.

அனாமிகன்  எருவில் குமாரசிங்கம் சுமீத்திரா தம்பதிகளின் புதல்வரும், சஞ்ஜீவன் மட்டக்களப்பு அமலநாதன் கமலேஸ்வரி தம்பதிகளின் புதல்வருமாவர்.

நாடுபூராகவும் சுற்றி வந்த இவ் இரு இளைஞர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்தவண்ணமிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

AR

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image