இலங்கையைச் சேர்ந்த பத்தாயிரம் ஊழியர்களுக்கு மலேசியாவில் பாதுகாப்புத் துறையில் தொழில்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். மலேசிய அரசாங்கம் ஏற்கனவே வழங்கியுள்ள பத்தாயிரம் தொழில்களுக்கு மேலதிகமாக இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்;டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இது பற்றி உரையாற்றினார்.