இலங்கையை கல்விக்கான பிராந்திய கேந்திர நிலையமாக மாற்ற முடியும் என ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையை கல்விக்கான பிராந்திய கேந்திர நிலையமாக மாற்ற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களுக்குச் செல்லும் மாணவர்கள் 3 பில்லியன் டொலர்களை செலவிடுகின்றனர். ஆனால், உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் பத்து பில்லியன் டொலர்களை நாட்டிற்குப் பெற்றுக்கொள்ள முடியும். நேற்று பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின்போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். இதுவரை இருந்துவந்த கல்வி முறையை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார். உலக தேவைகளுக்கு அமைய பௌதீக பல்கலைக்கழகத்தை மாத்திரமன்றி சைபர் தொழில்நுட்பத்திற்காகவும் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். கல்வி, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், சமூக வலுவூட்டல் அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 9ஆம் நாள் இன்றாகும். இன்று காலை 9.30ற்கு பாராளுமன்றம் கூடும். இதன்போது சுற்றாடல், வனஜீவராசிகள், வனவளப் பாதுகாப்பு, சுற்றுலா காணி விவகார அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
