Home » இலங்கை அணி நமீபியாவிடம் தோல்வி ; அடுத்தகட்டம் என்ன?

இலங்கை அணி நமீபியாவிடம் தோல்வி ; அடுத்தகட்டம் என்ன?

Source

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டியில் இலங்கை அணியை 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா அணி வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் நமீபியா அணியையோ துடுப்பெடுத்தாட அழைத்து.

முதலில் களமிறங்கிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 164 என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

முதல் போட்டியில் இலங்கை அணி பின்னடைவை சந்தித்துள்ளதால் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அணியின் தோல்வி குறித்து கருத்து வெளியிட்டுள்ள தலைவர் தசுன் ஷானக,

”தகுதிச் சுற்றில் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெறும். உலகக் கோப்பை நிச்சயமாக சவாலானது. நிலைமைகளுக்கு ஏற்ற வீரர்கள் எங்களிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன். கண்டிப்பாக அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னேறி போட்டியில் சிறப்பாக விளையாடி வெல்வோம் என நம்புகிறோம்” என அவர் கூறியுள்ளார்.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image