Home » இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ரி-20 கிரிக்கட் சுற்றுத்தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ரி-20 கிரிக்கட் சுற்றுத்தொடர் இன்று ஆரம்பம்

Source
Share Button

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் குழாமில் 11 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இலங்கை அணிக்கு தசுன் சானக்க தலைமை தாங்குகிறார். பெத்தும் நிஷங்க, தனுஷ்க குணதிலக்க ஆகிய வீரர்கள் இன்றைய போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கவிருக்கிறார்கள். மஹீஸ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க ஆகிய சுழல் பந்துவீச்சாளர்களும் இன்றைய போட்டியில் இலங்கை அணிக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 கிரிக்கட் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image