இலங்கைக்கும் இத்தாலிக்குமிடையில் வர்த்தக மற்றும் முதலீடுகள் தொடர்புகளை விரிவுபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை பிரதமர் தினேஷ் குனவர்தனவிற்கும் இத்தாலிய தூதுவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருக்கிடையில் இடம்பெற்றுள்ளது.
அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது புதிய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளவது குறித்து கண்டறியமாறு பிரதமர் அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இத்தாலிய மொழி திணைக்களத்தின் கிளையை இலங்கையில் அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்பொழுது ஸ்ரீ ஜெயவர்தன பல்கலைக்கழகத்துடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக இத்தாலிய தூதுவர் தெரிவித்துள்ளார். ஹோட்டல் தொழில் துறைக்காக இளைஞர்களை பயிற்றுவித்தல், அவர்களின் ஆற்றலை மேம்படுத்தவதற்கும் இத்தாலி எதிர்பார்த்துள்ளது.