Home » இலங்கை, இந்தியாவை சேர்ந்த 14 பேர் நடுக்கடலில் கைது.

இலங்கை, இந்தியாவை சேர்ந்த 14 பேர் நடுக்கடலில் கைது.

Source

இலங்கை இந்திய நடுக்கடலில் பீடி இலைகளை கடத்திய தமிழக மற்றும் இலங்கை பகுதியைச்d சேர்ந்த 14 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளனர்.

இந்திய  கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நடுக்கடலில் சட்டவிரோதமாக பீடி இலை மூட்டைகளை  படகில் பரிமாறிக் கொண்டிருந்த தமிழக மற்றும் இலங்கை பகுதியை சேர்ந்த  14 நபர்களை இந்திய கடலோர காவல் படை கைது செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு படகுகள் மற்றும் 3 தொன் எடை கொண்ட  பீடி இலைகளை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை  தூத்துக்குடி துறைமுகத்திற்கு கைது செய்யப்பட்டவர்களை கொண்டு செல்கின்றனர்.

கைது செய்யப்பட்ட 14 பேரில் 8பேர்  தமிழகத்தையும் ஆறுபேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படெகின்றது.
TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image