இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்தியாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த வேளையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சருடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை மேற்கொள்ள முடிந்ததாக அமைச்சர் அலி சப்ரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை குறித்தும் அங்கு மீளாய்வு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.