கடந்த வாரம் தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து தாக்குதல் நடத்திய இலங்கை இராணுவம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.