இலங்கை கடற்படையினருடன் நெருங்கிய ஒத்துழைப்புகளை முன்னெடுப்பதற்கு இந்தியா தயார்

இலங்கை கடற்படையினருடன் நெருங்கிய ஒத்தழைப்புகளை முன்னெடுப்பதற்கு இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளதாக இந்திய கடற்படையின் பிரதானி அட்மிரல் ஆர்.ஹரிக்குமார் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் எண்ணக் கருவான, பிராந்தியத்தில் உள்ள சல நாடுகளினதும் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த ஒத்துழைப்பு முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறினார். பிரதமர் தினேஷ் குனவர்த்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்திய கடற்படையின் பிரதானி இந்த விடயத்தை தெரிவித்தார்.
