இலங்கை தேசிய வலைப்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக திலகா ஜினதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை தேசிய வலைப்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக திலகா ஜினதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். உதவிப் பயிற்சியாளராக P.னு.N;.பிரசாதி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கை வலைபந்து அணி 2009 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் ஆசியக ;கிண்ணத்தை வென்றபோது அணியின் பயிற்றுவிப்பாளராக திலகா ஜினதாஸவே செயற்பட்டார். இவர் 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை புருனே தேசிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியுள்ளார். இதேவேளை, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண வலைபந்தாட்ட போட்டியில் இலங்கை அணி பங்கேற்றபோதும் அணியின் பயிற்றுவிப்பாளராக திலகா ஜினதாஸவே செயற்பட்டார்.
