இலங்கை தொழிலாளர்களுக்கு ஜப்பானில் கூடுதலான வாய்ப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கான ஒரே வழி வெளிநாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வங்கிகளின் ஊடாக பணம் அனுப்புவதாகும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். உயர்ந்த சம்பளம் பெறும் தொழில்களுக்கு இலங்கையர்களை அனுப்பத்தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜப்பான் போன்ற நாடுகளில் கூடுதலான வாய்ப்புக்களை ஏற்படுத்துவது இலக்காகும். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஜப்பானுக்கான தொழிலாளர்களை அனுப்பும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது. இதனால் எந்தவொரு இடைத்தரகருக்கும் பணம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லையென்றும் தொழில் தருவதாக கூறி, மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களிடம் சிக்கவேண்டாம் என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
