Home » இலங்கை பிரதமருக்கும் – அமெரிக்க இராஜாங்கச் செயலாளருக்கும் இடையில் விசேட உரையாடல்

இலங்கை பிரதமருக்கும் – அமெரிக்க இராஜாங்கச் செயலாளருக்கும் இடையில் விசேட உரையாடல்

Source
Share Button

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கனுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலைமை தொடர்பில் பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினார். இலங்கை, அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு விருப்பம் கொண்டிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இணக்கம் வெளியிட்டுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்ததும் இலங்கையின் முதலீட்டு அபிவிருத்திக்காக உதவி வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image