இலங்கை மத்திய வங்கி சட்ட மூலம் குறித்த இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது. பாராளுமன்ற விவகாரம் தொடர்பான செயற்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 9ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எக்ஸ்பிரஸ் பேள்; கப்பல் விபத்து பற்றிய சபை ஒத்திவைப்புவேளை விவாதம் எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறும். நலன்புரி கொடுப்பனவு பற்றி எதிர்வரும் 12ஆம் திகதி விவாதிக்கப்படும்.