காலையில் இந்திய மீன்பிடி அமைச்சரை வரவேற்பும் மாலையில் இலங்கை மீனவர்களிற்கு படகு கையளிப்பினையும் மேற்கொண்ட அமைச்சர்.
இந்திய மீன்பிடி இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட குழுவினரை யாழ் விமான நிலையத்தில் வரவேற்ற இலங்கை கடற்றொழில் அமைச்சர் மாலையில் இந்திய மீனவர்களின் படகை இலங்கை மீனவர்களிற்கு வழங்கி வைத்தார்.
மயிலிட்டி துறைமுகப் பகுதியில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் இந்திய மீனவர்களின் 4 படகுகளை இலங்கை மினவர்களிற்கு வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
இந்திய மீன்பிடி இணை அமைச்சர் விஜயம் செய்துள்ள நிலையில் இலங்கை கடற்பரப்பி்ல் அத்துமீறி பிரவேசித்த குற்றசாட்டில் அரசுடமையாக்கப்பட்ட இந்திய மீனவர்களின் 4 படகுகளே இவ்வாறு கடற்தொழில் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவினால் நேற்று வடக்கு மீனவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
TL