இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன திருத்தச்சட்டமூலம் மற்றும் சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் பாராளுமன்ஙறில் நிறைவேற்றப்பட்டுள்ளன

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன திருத்தச்சட்ட மூலம் மற்றும் சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டன. நாட்டின் பிரதான கட்டமைப்பிற்கு பங்கம் ஏற்படுத்தாத வகையில் செய்திகளை வெளியிடுவது ஊடகத்திற்கு மேன்மையை ஏற்படுத்தும் என்று விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர் கலாநிதி பந்துல குனவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை எந்த கட்சி வழிநடத்துகின்ற போதும் நாடு பற்றி சிறந்த தோற்றப்பாடு காணப்படவேண்டும். சில ஊடகங்கள் தனிப்பட்ட அபிப்பிராயங்களை வெளிப்படத்துகின்றன. இது பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நிபுணர்களின் அபிப்பிராயங்களுக்க ஊடகங்களில் வாய்ப்பு வழங்க வேண்டும்; என்றும் அவர் தெரிவித்தார். ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தை நாட்டின் தற்போதைய நடைமுறைகளுக்கு பொருத்தமான வகையில் தயாரிக்க வேண்டும் என்று விவாதத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருனாத்திலக தெரிவித்தார். வடக்கு கிழக்கு மற்றும் மலைய மக்கள் இந்திய அலைவரிசைகளுக்கு பழக்கப்பட்டிருப்பதினால் நாட்டிற்கு பாரியளவு நிதி இல்லாதுபோவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கன் விமான செவைகள் நிறுவனத்தை மறசீரமைக்கும் போது ஊழியாகளின் உரிமைகளை பாதுகதாக்கம் விடயத்தில் முக்கியத்துவம் வழங்குவதாக அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா தெரிவித்தார்.இதேவேளை. கட்டுநாயக்க விமான நிலைய கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என்றம் அவர் கூறினார்.
மருந்து தட்டுப்பாடு மற்றும் மந்த போசன நிலை உள்ளது என்பதை ஏற்றக்கொண்டு அவற்றிற்கு தீர்வு முன்வைக்கம் வேலைத்திட்டம் அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபயசிங்க கூறினார்.
