இலங்கைவாழ் முஸ்லிம்கள் இன்று மாலை மஃரிப் தொழுகையுடன் புனித ரமழான் மாதத்தை ஆரம்பிக்கவுள்ளார்கள். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ரமழான் மாத நோன்பு கருதப்படுகிறது. மனித ஆசைகளை கட்டுப்படுத்தி, ஏழைகளின் நிலையை அறிந்து கொள்வதற்கும் நோன்பு வழிவகுக்கிறது. புனித வேதமான அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது.
இதேவேளை, புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் தேசிய வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. சஹர் விசேட முஸ்லிம் நிகழ்ச்சிகள் அதிகாலை 2.30 தொடக்கம் காலை 5 மணிவரை ஒலிபரப்பாகவுள்ளது. வழமையான காலை நேர முஸ்லிம் நிகழ்ச்சிகள் 8 மணிமுதல் ஒலிபரப்பாகும். இப்தார் விசேட நிகழ்ச்சிகள் மாலை 6 மணி தொடக்கம் 6.30 வரை இடம்பெறவிருக்கின்றன. இரவு 8 மணிமுதல் 9 மணிவரை ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சிகள,; நோன்பு காலப்பகுதியில் இரவு 7 மணி தொடக்கம் 8 மணிவரை ஒலிபரப்காகும்.
இதேவேளை, தேசிய வானொலியில் மாலை 6 மணிக்கு ஒலிபரப்பாகும் பிரதான செய்தி அறிக்கை நாளை தொடக்கம் ரமழான் மாதம் நிறைவடையும் வரை மாலை 5 மணிக்கு ஒலிபரப்பாகவிருக்கிறது.