Home » இளைஞர்களின் கல்வித்துறையை மேம்படுத்த கூகுல் நிறுவனம் முன்வந்துள்ளது

இளைஞர்களின் கல்வித்துறையை மேம்படுத்த கூகுல் நிறுவனம் முன்வந்துள்ளது

Source
Share Button

நாட்டில் உள்ள இளைஞர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக கூகுல் நிறுவனத்தின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்பட இருக்கின்றது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நேற்று கைச்சாத்திடப்பட்டது. கூகுல் வகுப்பறை, கூகுல் வேலைத்தளம் ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி இளைஞர் சேவைகள் மன்றத்தின் கற்றல் நடவடிக்கைகளை இலவசமாக மேற்கொள்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் திரான் டீ சில்வா கூகுல் சிறிலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுஜாதா நடேசன் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image