இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலால் சிரியாவின் டமஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்பு

இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலால் சிரியாவின் டமஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் அதன் ஓடுபாதை உட்பட பகுதிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சிரிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதலால் விமான நிலைய வரவேற்புக் கூடத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு மேலதிகமான பல இடங்களில் ஓடுபாதைகள் மற்றும் வழிச்செலுத்தல் விளக்குகளும் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இதனால் தரையிறங்கும் மற்றும் புறப்படும் விமானங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
