இஸ்ரேலில் 500 வேலைவாய்ப்புகள் – தென்கொரியாவுக்கு இன்றும் 700க்கும் அதிகமானோர் பயணம்

இஸ்ரேல் உடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பத்தத்திற்கு அமைய அந்த நாட்டின் வர்த்தக நிலையங்களில் பணி புரிவதற்கு 500 இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்சமயம் 38 பேர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே இலங்கைக்கும் தென்கொரியாவுக்கமிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துனர்வு ஒப்பந்தத்திற்று அமைய இலங்கையர்கள் பலர் தென்கொரியாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இந்த வருடம், இதுவரையான காலப்பகுதியில் இரண்டாயிரத்து 105 பேர் கொரியா சென்றுள்னர். இன்றைய தினமுத் 723 பேர் கொரிய வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளதாக பணியனகம் குறிப்பிட்டுள்ளது.
