இலங்கையில் இருந்து விமானம் மூலம் இந்தியா சென்றவர் மண்டபம் இலங்கைந் தமிழர் மறுவாழ்வு முகாமில் தூக்கிட்டுத் தற்கொலை புரிந்துள்ளார்.
இதன்போது சந்திரசேகரம் சம்பந்தன் என்னும் 25 வயதையுடைய கருணை இல்ல வீதி
மூன்றாம் ஒழுங்கை
புளியங்குளம், வவுனியா என்னும் முகவரியுடைய இளைஞனே தற்கொலை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இருந்து 25.02.2021 அன்று கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றுள்ளார். பின்னர் ஒசூர் பகுதியில் தொழில் புரிந்து விட்டு 06.01.2022 அன்று இராமேஸ்வரம் தனுஷ்கோடி சென்றவேளை மரைன் போலீசார் விசாரணை செய்து பின்னர் மண்டபம் தனித்துணை ஆட்சியர் அவர்கள் மூலம் 06.01.2022 முதல் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர் வெளியில் கட்டிட வேலைக்கும் சென்று வந்துள்ளார்.
இருந்தபோதும் 2022-07-18 அன்று அவர் தங்கியிருந்த இடத்தில் தற்கொலை புரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றபோதும் அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
TL