ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்க அமெரிக்கா துணை நிற்கிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
ஜூலி சங் தமது ட்விட்டர் பதிவில், “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்டர் ஞாயிறு அன்று கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஐந்து அமெரிக்கர்கள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை இன்று நான் நினைவுகூர்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் அமெரிக்கா கௌரவிப்பதுடன் மற்றும் நீதிக்காக காத்திருப்பவர்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது” எனவும் கூறியுள்ளார்.
N.S