உக்ரேனுக்கு எதிரான யுத்தத்தில் ரஷ்யாவால் வெற்றி பெற முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவிப்பு

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய உக்ரைன் நகரமான கிரெமென்சுக் பகுதியில் உள்ள வணிக வளாகம் மீது ரஷ்ய படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக பொல்டாவா பிராந்தியத்தின் ஆளுநர் டிமிட்ரோ லுனின் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 59க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமிப்பதற்காக மேற்கொள்ளும் யுத்தத்தில் வெற்றி கொள்ள முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடையை மேலும் வலுப்படுத்த வேண்டுமெனவும் மக்ரோன் தெரிவித்துள்ளார். இதனிடையே ரஷ்யாவிற்கு எதிராக மேலும் தடைகளை விதிப்பதற்கு ஜேர்மனும் நடவடிக்கை மேற்கொள்ளுமென அந்நாட்டின் சான்சலர் தெரிவித்துள்ளார்.
