அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் எல்லையற்ற அதிகாரத்தைத் தேடிவருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். தற்சமயம் இடம்பெறும் யுத்தத்திற்கு இந்த நாடுகளே பொறுப்புப் கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டுக்கான தேசிய உரையின் போது, ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ளார். பொருளாதார தடைகள் ரஷ்யாவின் மீது பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா, உக்ரேனை ஆக்கிரமத்து, எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், ஜனாதிபதி புட்டினின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.