உணவுப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களில் பிரதமரிடம்

.
உணவுப் பிரச்ச்pனைக்கு மத்தியில் ஒருவரும் பட்டினியுடன் இருக்க மாட்டார்கள் என தாம் உறுதியளிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். உணவு நெருக்கடி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சாவின் தலைமையில் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் தம்மிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். உணவு உற்பத்தி நடவடிக்கையில் நாடளாவிய ரீதியில் 336 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் தொடர்புபடுத்திய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினால்.
