உணவுப் பொருட்களுக்கான கூடுதலான பணவீக்கத்தைக்கொண்ட நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்க உலகவங்கி தீர்மானித்துள்ளது. உலக உணவுப் பாதுகாப்பு பற்றி உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இலங்கை 5 ஆவது இடத்தில் இருந்ததோடு தற்சமயம் இலங்கை இந்தப் பட்டியலின் முதல் பத்து இடங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களுக்கான கூடுதலான பணவீக்கத்தைக்கொண்ட நாடுகளின் பட்டியலில் லெபனான் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.