உணவு நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என விவசாய அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

தற்சமயம் எதிர்நோக்கியுள்ள உணவு நெருக்கடிக்கு அர்ப்பணிப்புடன் செயற்பாட்டால் மாத்திரமே தீர்வுகாண முடியும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உணவு சார்ந்த பணவீக்கத்திலிருந்து மீள்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை விவசாயிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். நாட்டுக்குத் தேவையான அரிசி தொகை இந்த வருட இறுதிவரை கையிருப்பில் காணப்படுகிறது. எதிர்வரும் பெரும்போக அறுவடையைத் தொடர்ந்து, அரிசி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். பெரும்போகத்திற்குத் தேவையான உரத்தை வழங்கவும் அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.
