உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்காளர் அட்டைகளை பொறுப்பேற்கும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தேர்தலுடன் தொடர்புடைய உத்தியோகபூர்வ தேர்தல் அறிவித்தல் பத்திரம் எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து வீடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.