உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு வட்டியி;ல்லாக் கல்விக் கடன்

அரச பல்கலைக்கழகங்கள் அல்லாத உயர்கல்வி நிறுவனங்களின் மூலம் பட்டப்படிப்பைத் தொடருடம் ஆறாயிரத்து 847 மாணவர்களுக்கான மாணவர் கடனுக்கான வட்டித் தொகையை திறைசேரி மூலம் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கான பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான மாணவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படுகின்றது. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, அரச பல்கலைக்கழகங்கள் அல்லாத உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு அரச அங்கீகாரம்பெற்ற பட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கோடு இந்த வசதி வழங்கப்படுகின்றது. உயர்கல்விக்காக இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது இதன் நோக்கமாகும். எட்டு லட்சம் ரூபா வரையிலான பாடநெறிக் கட்டணத்தை அரைவாசியாக செலுத்தியதன் பின்னர் தவணை அடிப்படையில் எஞ்சிய தொகையை செலுத்த விருப்பம் தெரிவித்துள்ள மாணவர்களுக்கு இந்த உதவியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
