உயர்தரப் பரீட்சையின் செயல்முறைப் பரீட்சை தற்சமயம் இடம்பெறுவதாக கல்வியமைச்சர் அறிவித்துள்ளார்
உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் இணைந்து கொள்ள ஆசிரிய தொழிற்சங்க கூட்டணி இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையின் செயல்முறைப் பரீட்சை தற்சமயம் இடம்பெறுகின்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் நெருக்கடிக்கும் தீர்வுகாணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை எதிர்வரும் சிலநாட்களில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்துவெளியிட்டார்.