Home » உயர்தர பரிட்சை விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் 18ஆம் திகதியுடன் நிறைவு

உயர்தர பரிட்சை விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் 18ஆம் திகதியுடன் நிறைவு

Source
Share Button

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்கள் பெற்றுள்ள பாடம், ஊடகம் அல்லது அனுமதி அட்டையின் பெயர் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றம் இணையத்தளத்தில் திருத்தப்பட வேண்டுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ழடெiநெநஒயஅள.பழஎ.டம என்ற இணையத்தளத்திற்கு சென்று திருத்தம் மேற்கொள்ள முடியும்.
ஒவ்வொரு விண்ணப்பதாரிக்கும் ஒரு முறை மாத்திரமே திருத்தம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என பரிட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பெயர் திருத்தம், தேசிய அடையாள எண் ஆகியவை முறையான சரிபார்ப்புக்கு உட்பட்டு மட்டுமே அனுமதிக்கப்படும்.
உறுதிப்படுத்தத் தவறிய கோரிக்கை நிராகரிக்கப்படும். பரிட்சை மத்திய நிலையங்களை மாற்ற முடியாது.
இந்த திருத்தத்திற்காக கால எல்லை ஜனவரி 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரையில் வழங்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு தோற்றுவதற்கு, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரிட்சைகள் இரண்டாயிரத்து 200 மத்திய நிலையங்களில் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறும்.
நாளை நள்ளிரவு 12 மணி முதல் அனைத்து பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image